சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கல்லுமடை. இங்கு 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான திருநாகேசுவரமுடையார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இறைவனின் சக்தியால் நிறம் மாறுவதைக் காண, ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களி-லிருந்தும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
No comments:
Post a Comment