Pages

Thursday, 17 March 2011

கோளறு பதிகம்

கோளறு பதிகம்...

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம்.


வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியார‌ வர்க்கு மிகவே."

"என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே."


கிரகங்களின் பாதிப்புகளில் இருந்து ஒருவரை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோளறு பதிகத்தினை பாராயணம் செய்து வந்தால் போதுமானது என்கிறார்

-குரு சங்கராச்ச்சாரியார்.

Sunday, 13 March 2011

பிரதோஷ விரதம்கடைப் பிடிக்கும் முறை


பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.
பிரம்ம  முராரி  ஹுரார்ச்சி  லிங்கம் 

நிர்மல பாஷித சோபித  லிங்கம் 

ஜென்மஜ  துக்க  விநாசன லிங்கம் 

தத்ப்ரணமாமி   சதா சிவ லிங்கம்     

                   
                                            நம்  பாவத்தைப்  போக்கி  குறை  உடைய மனித வாழ்வை நிறை உடையதாய் மற்றவே  நாம்  கடவுளை   வணங்குகின்றோம்.  சிவனுக்கு  செய்யப்படும்  பூஜைகளில் பிரதோஷத்தின்  போது  செய்யப் படும் பூஜை  சிறப்பானதாகும் .

                      பிரதோஷ  தினங்களில்  உபவாச மிருத்தல்  நன்மை  பயக்கும் .பிரதோஷ வழி  பாட்டால்கிட்டும்  பலன்கள் :
                       
                         நோய்   நீங்குதல்  ,கடன்  நீங்கி  தனம்  பெறுதல் ,துன்பம் நீங்கி  இன்பம்  பெறுதல் ,முக்தி அடைதல் ,பாவம்  நீங்கி  புண்ணியம்  பெறுதல் ,மழலை  செல்வம்  கிட்டுதல் ,அறியாமை  நீங்கி  ஞானம்  பெறுதல் ,செல்வச் செழுமை  ஆகியஅனைத்து  நன்மைகளும்  நம்மை  நாடிவரும் .
                       
                                பிரதோசங்களில்  சனிக்கிழமை  வரும்  பிரதோஷ  நாட்களில்  ஆலயம்   சென்று  வழிபட்டால் ,ஒருவருடம்  தினமும்  சென்று  வழிபட்ட  பலன்  கொடுக்கும்   பிரதோஷ   வேளை என்பது  மாலை  மணி  நான்ங்கு முப்பது  முதல் ஆறு மணி  வரையுள்ள  காலமாகும் .
                                    
                                 பிரதோஷ  நேரத்தில்  ஐந்து எழுத்து  மந்திரத்தை  சொல்லிக்கொண்டே   இருக்க  வேண்டும் .               
                                                  ஓம் நம சிவாயபிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்

1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் - பல வளமும் உண்டாகும்

3. தேன் - இனிய சாரீரம் கிட்டும்

4. பழங்கள் - விளைச்சல் பெருகும்

5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

6. நெய் - முக்தி பேறு கிட்டும்

7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்

8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

9. எண்ணெய் - சுகவாழ்வு

10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

பொதுவான பலன்கள்:
குழந்தை பாக்கியம் கிடைக்க,ஊழ்வினைகளை நீக்க,பிறவிப்பிணி நீங்க, தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.("தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே! -என்கிறது தேவாரம்")-S.Yaamini

Tuesday, 8 March 2011

கோயில் திருப்பணி நடந்து கொண்டு இருக்கின்றது

கோவில் திருப்பணிகள் தொடங்கி நடந்து கொண்டு இருக்கின்றது எங்களுடன் இணைந்து அருட்பணி செய்ய அழைக்றோம்-
9003465601



கல்வெட்டுகள் -1


கல்வெட்டுகள் இந்த திருக்கோயிலை சுற்றி காணப்படுகின்றது ,

கல்வெட்டுகளில் கிடைத்த தகவல்கள். . . . . .

    இவ்வூரில் உள்ள சிவன் கேயில் கி,பி 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சடையன்மாறனின் வட்டெழுத்துக்க  கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன, இவை கேரளசிணு்க முத்தரையன் என்பவன் சோழநாட்டுத் திருப்பாலையூர்  கேயிலுக்கு (கல்விமடை சிவன் கோவிலுக்கு) நிலமளித்ததையும் ,திருநந்தா விளக்கு அளித்தையும் குறிப்பிடுகின்றன ,
 இக்கோயிலின் அதிட்டானத்தில் கி,பி 13ம் நூற்றாண்டைச் சார்ந்த எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், சைடயவர்மன் விக்கிரமபாண்டியன் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன இவை திருப்பாலையூர் இறைவனுக்கு நிலக் கொடை அளித்ததை தெரிவிக்கின்றன
 
(ஆதாரம்; தா.நா.தொல்லியல் துறை /விருதுநகர் மாவட்ட  தெகுதி-1)

Saturday, 5 March 2011

கல்விமடை சிவன் கோயில்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கல்லுமடை. இங்கு 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான திருநாகேசுவரமுடையார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள  அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இறைவனின் சக்தியால் நிறம் மாறுவதைக் காண, ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களி-லிருந்தும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.