Pages

Monday, 26 September 2011

நவராத்திரி

நவராத்திரி

 

அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும்,
அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்
மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.முக்கியமாக பார்க்கபோனால் ஒரு வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு
அவற்றில் புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும்
கொண்டாடுகிறார்கள். ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.
புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர்.
இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக
கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து
தசராகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச்
சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகை
மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை
திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.
நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை
தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள்.
சரத்காலம் என்று மேலே குறிப்பிட்டுள்ளேன்.
வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன்,
இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு
புறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஐய தசமி அன்று புதிய கல்வி
கற்பதைத் தொடங்குவார்கள். பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான்
ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த யுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று
மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.
சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம்,
நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை.
நவராத்திரி என்பது விரமிருந்து கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரி: வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த
ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது.
வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி,
தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு
என்ற கோயிலுக்கு ஒரு’பிரம்மோற்சவம்’ என்று கூட சொல்லாம்.
சித்திரை, புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்களை யமனது கோரப் பற்கள்
என்று சொல்வார்கள். பிணிகள் உடலை துன்புறுத்தி,பிணித்து நலியும்படி செய்யும்.
சாதாரமாக, உயிரும் உடலும் தாங்கவே முடியாத பல துன்பங்களை இறைவன்
அருள்வதில்லை. துன்பங்கள் உடலுக்கு ஏற்படும்போது, அவற்றிலிருந்து போக்குவாய்
சக்தி வழிபாடு.
சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும்.
புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும்.
இவை இரண்டில்’சாரதா நவராத்திரி என்பது புகழ் பெற்றது; எல்லோரும் கொண்டாடடுவது;
தனிச் சிறப்புடையது.
நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச்
சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால்
பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன்.
சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி,
மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.
புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில்
நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரைவழிபடவேண்டும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.
இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.
இடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.
துர்க்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை.
இச்சா சக்தி. ”கொற்றவை ” , ”காளி” என்றும் குறிப்பிடுவர். வீரர்களின்
தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற
அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ‘ நவராத்திரி ‘ எனப்படும்.
அவனை வதைத்த பத்தாம் நாள் ‘ விஜயதசமி’ [ விஜயம் மேலான வெற்றி]
[ மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில்சிற்ப வடிவில் நாம்கண்டுள்ளோம்]
வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.
நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை,
சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை .
இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.
இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.
செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.
இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள்.
பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.
இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.
முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர்.
அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி ,
சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி .
இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.
சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.
கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சக்தி.
தமிழ் நூல்கள் சரஸ்வதியை, ‘ற்றங்கரைச் சொற்கிழத்தி ‘
என்று குறிப்பிடுகிறது.
இவளுக்குத் தனி கோயில் இருக்குமிடம் ஊர் கூத்தனூர்.
கம்பருக்காக கொட்டிக் கிழங்கு விற்றவள்.
சரஸ்வதி பூஜை : நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம்
உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வது
முறையாகும். இது தேவியின் அவதார நாள்.
சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு
பெறுகிறது. சிரவணம் – திருவோணம் அன்றே விஜயதசமி.
சமுதாயத்தில் தொழில் , புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது.
ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம்.
புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது.
எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை.
நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை
மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.
விஜய தசமி: ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம் நாள்
அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி – வெற்றி தருகிற நாள்.
பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து
நற்காரியங்களும் வெற்றி தரும்.
அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி,
கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி
ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள்
சிறப்பாக உள்ளன.
துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி.
இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.
சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.
நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம்.
ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும்
கொள்ளவேண்டும்.
நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை.
நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு
தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை.
இதனால், நவராத்திரி வழிபாட்டில் மிகப் பலகன்னியர்களும், அவர்களின்
குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின்
குறிக்கோள்களில் ஒன்றாகும்.

விரதங்களும் அவற்றின் பலனும்

 விரதங்களும் அவற்றின் பலனும்

சோமவார விரதம்

நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.

பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை

சிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.

பிரதோஷம்

நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.

தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்

விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.

பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.

சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

சித்ரா பவுர்ணமி விரதம்

நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்

தெய்வம் : சித்திரகுப்தர்

விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

தை அமாவாசை விரதம்

நாள் : தை அமாவாசை

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி

சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கந்தசஷ்டி விரதம்

நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்

தெய்வம் : சுப்பிரமணியர்

விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.

பலன் : குழந்தைப்பேறு

மங்களவார விரதம்

நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்

தெய்வம் : பைரவர், வீரபத்திரர்

விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்

பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்

உமா மகேஸ்வர விரதம்

நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி

தெய்வம் : பார்வதி, பரமசிவன்

விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

விநாயக சுக்ரவார விரதம்

நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்

தெய்வம் : விநாயகர்

விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.

பலன் : கல்வி அபிவிருத்தி

கல்யாணசுந்தர விரதம்

நாள் : பங்குனி உத்திரம்

தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)

விரதமுறை : இரவில் சாப்பிடலாம்

பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்

சூல விரதம்

நாள் : தை அமாவாசை

தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்

விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்

பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

இடப விரதம்

நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி

தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்

விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.

பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு

சுக்ரவார விரதம்

நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்

தெய்வம் : பார்வதி தேவி

விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்

பலன் : மாங்கல்ய பாக்கியம்

தைப்பூச விரதம்

நாள் : தை மாத பூச நட்சத்திரம்

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

பலன் : திருமண யோகம்

சிவராத்திரி விரதம்

நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி

தெய்வம் : சிவன்

விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.

பலன் : நிம்மதியான இறுதிக்காலம்

திருவாதிரை விரதம்

நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்

தெய்வம் : நடராஜர்

விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.

பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்

சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

கேதார விரதம்

நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.

தெய்வம் : கேதாரநாதர்

விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.

பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்

விநாயகர் சஷ்டி விரதம்

நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்

தெய்வம் : விநாயகர்

விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.

பலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.

முருகன் சுக்ரவார விரதம்

நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.

தெய்வம் : சுப்ரமணியர்

விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.

பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

கிருத்திகை விரதம்

நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.

தெய்வம் : சுப்பிரமணியர்

விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்

பலன் : 16 செல்வமும் கிடைத்தல்

நவராத்திரி விரதம்

நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை

தெய்வம் : பார்வதிதேவி

விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக சாப்பிடக் கூடாது.

பலன் : கல்வி, செல்வம், ஆற்றல்

Monday, 4 April 2011

கல்விமடை சிவன் கோயில் சிறப்புக்கள்

பிரார்த்தனை:
நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை வழிபடலாம்.
நேர்த்திக்கடன்: சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றுதல்.  அம்மனுக்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், குழந்தை பேறு கிடைப்பதாக நம்புகிறார்கள்.

திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துக்கொண்டு சுவாமியை தரிசனம் செய்யலாம். 
  -யாமினி


Thursday, 17 March 2011

கோளறு பதிகம்

கோளறு பதிகம்...

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம்.


வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியார‌ வர்க்கு மிகவே."

"என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே."


கிரகங்களின் பாதிப்புகளில் இருந்து ஒருவரை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோளறு பதிகத்தினை பாராயணம் செய்து வந்தால் போதுமானது என்கிறார்

-குரு சங்கராச்ச்சாரியார்.

Sunday, 13 March 2011

பிரதோஷ விரதம்கடைப் பிடிக்கும் முறை


பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.
பிரம்ம  முராரி  ஹுரார்ச்சி  லிங்கம் 

நிர்மல பாஷித சோபித  லிங்கம் 

ஜென்மஜ  துக்க  விநாசன லிங்கம் 

தத்ப்ரணமாமி   சதா சிவ லிங்கம்     

                   
                                            நம்  பாவத்தைப்  போக்கி  குறை  உடைய மனித வாழ்வை நிறை உடையதாய் மற்றவே  நாம்  கடவுளை   வணங்குகின்றோம்.  சிவனுக்கு  செய்யப்படும்  பூஜைகளில் பிரதோஷத்தின்  போது  செய்யப் படும் பூஜை  சிறப்பானதாகும் .

                      பிரதோஷ  தினங்களில்  உபவாச மிருத்தல்  நன்மை  பயக்கும் .பிரதோஷ வழி  பாட்டால்கிட்டும்  பலன்கள் :
                       
                         நோய்   நீங்குதல்  ,கடன்  நீங்கி  தனம்  பெறுதல் ,துன்பம் நீங்கி  இன்பம்  பெறுதல் ,முக்தி அடைதல் ,பாவம்  நீங்கி  புண்ணியம்  பெறுதல் ,மழலை  செல்வம்  கிட்டுதல் ,அறியாமை  நீங்கி  ஞானம்  பெறுதல் ,செல்வச் செழுமை  ஆகியஅனைத்து  நன்மைகளும்  நம்மை  நாடிவரும் .
                       
                                பிரதோசங்களில்  சனிக்கிழமை  வரும்  பிரதோஷ  நாட்களில்  ஆலயம்   சென்று  வழிபட்டால் ,ஒருவருடம்  தினமும்  சென்று  வழிபட்ட  பலன்  கொடுக்கும்   பிரதோஷ   வேளை என்பது  மாலை  மணி  நான்ங்கு முப்பது  முதல் ஆறு மணி  வரையுள்ள  காலமாகும் .
                                    
                                 பிரதோஷ  நேரத்தில்  ஐந்து எழுத்து  மந்திரத்தை  சொல்லிக்கொண்டே   இருக்க  வேண்டும் .               
                                                  ஓம் நம சிவாயபிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்

1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் - பல வளமும் உண்டாகும்

3. தேன் - இனிய சாரீரம் கிட்டும்

4. பழங்கள் - விளைச்சல் பெருகும்

5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

6. நெய் - முக்தி பேறு கிட்டும்

7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்

8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

9. எண்ணெய் - சுகவாழ்வு

10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

பொதுவான பலன்கள்:
குழந்தை பாக்கியம் கிடைக்க,ஊழ்வினைகளை நீக்க,பிறவிப்பிணி நீங்க, தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.("தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே! -என்கிறது தேவாரம்")-S.Yaamini

Tuesday, 8 March 2011

கோயில் திருப்பணி நடந்து கொண்டு இருக்கின்றது

கோவில் திருப்பணிகள் தொடங்கி நடந்து கொண்டு இருக்கின்றது எங்களுடன் இணைந்து அருட்பணி செய்ய அழைக்றோம்-
9003465601



கல்வெட்டுகள் -1


கல்வெட்டுகள் இந்த திருக்கோயிலை சுற்றி காணப்படுகின்றது ,

கல்வெட்டுகளில் கிடைத்த தகவல்கள். . . . . .

    இவ்வூரில் உள்ள சிவன் கேயில் கி,பி 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சடையன்மாறனின் வட்டெழுத்துக்க  கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன, இவை கேரளசிணு்க முத்தரையன் என்பவன் சோழநாட்டுத் திருப்பாலையூர்  கேயிலுக்கு (கல்விமடை சிவன் கோவிலுக்கு) நிலமளித்ததையும் ,திருநந்தா விளக்கு அளித்தையும் குறிப்பிடுகின்றன ,
 இக்கோயிலின் அதிட்டானத்தில் கி,பி 13ம் நூற்றாண்டைச் சார்ந்த எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், சைடயவர்மன் விக்கிரமபாண்டியன் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன இவை திருப்பாலையூர் இறைவனுக்கு நிலக் கொடை அளித்ததை தெரிவிக்கின்றன
 
(ஆதாரம்; தா.நா.தொல்லியல் துறை /விருதுநகர் மாவட்ட  தெகுதி-1)

Saturday, 5 March 2011

கல்விமடை சிவன் கோயில்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கல்லுமடை. இங்கு 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான திருநாகேசுவரமுடையார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள  அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இறைவனின் சக்தியால் நிறம் மாறுவதைக் காண, ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களி-லிருந்தும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.